Friday, 13 May 2016

V - Kaatsi/Scene- Sun (1)

இரண்டாங் கிளை: புகழ் 
 SECOND BRANCH: GLORY

ஞாயிறு
SUN

                                                                      (1)


ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்?
 கண் எவனுடையதுஉணி எவன் தருகின்றான்புகழ் எவன் தருகின்றான்
புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது
ஞாயிறு. அது நன்று.

What gives light?
What is ever youthful?
Who gives heat?
Whose is happiness?
Who gives rain?
Whose is the eye? Sight
Who gives food?

Who gives worthiness of praise? (Brahman)
Whose is all the praises? (Brahman)

What will knowledge shine like?
As the vision of Brahman
                     
Which is the temple of the God of Knowledge?
Witness state of the Self which is the abode of knowledge

Sun! It is good! 


                                                                  
(2)

 நீ ஒளி , நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி.
மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து- இவையெல்லாம் நினது திகழ்ச்சி.
கண் நினது வீடு.

புகழ், வீரம்- இவை நினது லீலை.
அறிவு நின் குறி. அறிவின் குறி நீ.
நீ சுடுகின்றாய்வாழ்க
நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் துருகின்றாய், உடல் தருகின்றாய், வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய்,
நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.

You are light.
You are burning flame.
You are the seen. (All that is perceived)

Lightning, precious stone, burning, blazing fire, - all these are your doings.

Eye is your abode.

Glory and valor – these are your sports.
Knowledge is your symbol.
You are the symbol of knowledge.

You are the symbol of Brahman, the principle of Knowledge.
Sun alone is prayed for in the Gaayatri Mantra

You burn. (As the Jeeva)
You be praised.

You reveal. (As Consciousness)
You be praised.

You give us the life.
You give us the body.
You make it grow.
You destroy it.
You give water.
You blow the wind.
You be praised!

(3)


வைகறையின் செம்மை இனிது
மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க!

 உஷையை நாங்கள் தொழுகின்றோம்.
அவள் திரு. அவள் விழிப்புத் தருகின்றாள். தெளிவு தருகின்றாள்
உயிர் தருகின்றாள். ஊக்கந் தருகின்றாள்
அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்
அவள் வாழ்க.

அவள் தேன்
சித்த வண்டு அவளை விரும்புகின்றது.
அவள் அமுதம், அவள் இறப்பதில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும்,
இனிமை மிகவும் பெரிது.

வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து தருவாள்
வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள்
அவளுடைய நகைப்புக்கள் வாழ்க.

 தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு மிகுதியால்.
ஒன்று பலவினும் இனி தன்றோ?  
வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.


 The redness of the early sunrise time is pleasing.
May Ushaa (Goddess of Dawn) who smiles like the flowers be praised!

The Saattvic state of the mind before the realization of the Self, is pleasing like Ushaa, the Goddess of Dawn.

We worship Ushaa.
She is Goddess.
She gives us the awakening.
She gives clarity.
She gives life.
She gives encouragement.
She gives beauty.
She gives poem.
May she be praised!

She is honey.
The pure state of the mind before the rise of Brahman-state is blissful.

The mind-bee desires her.
She is nectar. She does not die.

Goodness does not vanish off. It adds strength to the mind.

She unites with strength. Strength alone unites with beauty.
The bliss of the union is great.

She rises in the Golden Meru Mountain in the God-world and will come as many and bless us.
In Vedas, Ushaa is said to be many, totaling all the previous ones.
Here it means, Goodness expresses in many ways.

She will wander under the sky laughing and sporting.
May her laughter be praised!

Goodness gives unique happiness.

At South she comes to us singly, due to excessive affection for us.
But in this world of mortals, she is only one deity.
Better have the one good thought of liberation than master all virtues.

Is not one more pleasing than many?
That itself will take you to the Supreme state of Brahman beyond all the good and bad.

Early morning is good.
Sattva that foretells the state of Self that will arise- is good.

We praise it.

(4)


நீ சுடுகின்றாய்.நீ வருத்தந் தருகின்றாய்
நீ விடாய் தருகின்றாய். சோர்வு தருகின்றாய். பசி தருகின்றாய்.
இவை இனியன.

 நீ கடல்நீரை வற்றடிக்கிறாய். இனியமழை தருகின்றாய்
வான வெளியிலே விளக்கேற்றுகிறாய்இருளைத் தின்று விடுகின்றாய்.
நீ வாழ்க.

Brahman is everything that we feel.
You burn.
You give distress.
You give thirst.
You give fatigue.
You give hunger.
All these are pleasant.
because Brahman is the essence of all.

Brahman is the Sun of Knowledge!

You dry up the ocean water. (All attachments to the world)
You give pleasing rains. (Give the necessary help in the path of knowledge.)
You light up the sky. (You light up my intellect).
You devour the darkness. (You remove ignorance.)
May we praise you!

                                                                   (5)


ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்
ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா
கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா
அது நின் காதலியா
இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா
நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா
நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா
முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய்
ஏவி யிருக்கிறாளா
உங்களுக்கு மரண மில்லையா
நீங்கள் அமுதமா
உங்களைப் புகழ்கின்றேன்,
ஞாயிறே,உன்னைப் புகழ்கின்றேன்.

Knowledge destroys ignorance completely.

Hey Sun! What did you do to the darkness?
Did you chase it away? Did you kill it? Did you devour it?
Did you embrace her, kiss her and cover her up with your rays (hands)?
Is darkness your enemy?
Is darkness your food?
Is darkness your beloved?
Was she dark (hidden in the mind) because she did not see you all through the night?
When she saw you, did it absorb your luster and got absorbed into you?
Are you both the children of the same mother?
Has your mother sent you to protect the world one after the other?
Is there no death for you? Are you immortal?
I praise you.
Sun I praise you.
(6)

ஒளியே,நீ யார்? ஞாயிற்றின் மகளா?
அன்று, நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்.

ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் வடிவம், உடல் நீ.
உயர் ஒளியே நீ எப்போது தோன்றியான்? 
நின்னை யாவர் படைத்தனர்?
ஒளியே நீ யார்? உனதியல்பு யாது?

 நீ அறிவின் மகள் போலும்அறிவுதான் தூங்கிக்கிடக்கும்
தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும்
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாட் பழக்கம்
உனக்கு அதனிடத்தே இவ்வகைப் பட்ட அன்பு யாது பற்றியது?
அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்
உங்களையெல்லாம் படைத்தவள் வித்தைக்காரி.
அவள் மோஹினி.மாயக்காரி.
அவளைத் தொழுகின்றோம்
ஒளியே,வாழ்க!


The perceiver of the perceived world we see is in essence Brahman, the Self!

Light! (Perceiver of the World/Aatman/Self)
Who are you?
Are you the daughter of Sun (Brahman)?
No, you are the life-essence of Sun; Sun’s God.

We praise you alone, when we praise the Sun.
You are the shape, body of the Sun (Brahman).

Hey Supreme light! When did you appear?
Who created you?

Hey Light! Who are you? What is your nature?

You must be the daughter of knowledge.
Knowledge of the Self is hidden by the knowledge of the world.

(Self-) Knowledge will be sleeping.
You must be the clarity. (Clear vision of Truth)
You must be the body of knowledge.

Hey Light!  How long have you known the sky (expanse of emptiness)?
What makes you have love towards it?
How do you mix it with completely?

The one who made you all is a magician. (Maayaa)
She is a deluding lady.
She is a trickster.
We praise her.
Hey light! Be praised!




No comments:

Post a Comment