Friday, 13 May 2016

(24) Kaatru/Wind - 15


 (15)

உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்
நீ கண் கண்ட தெய்வம்
எல்லா விதிகளும் நின்னால் அமைவன.   எல்லா விதிகளும் நின்னால் அழிவன
உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம்.
தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ
மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில்
பறக்கின்ற பூச்சி. கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு
இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள்
எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த் தொகைகள்-
இவை யெல்லாம் நினது விளக்கம்.

மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் 
உயிர்களைக் கருதுகின்றோம்
காற்றிலே ஒரு சதுர-அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் 
நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.

ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்
அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்அவற்றுள் இன்னுஞ் சிறியவை- இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.

மஹத்-அதனிலும் பெரியமஹத்-அதனிலும் பெரிது-அதனிலும் பெரிது.
அணு-அதனிலும் சிறிய அணு-அதனிலும் சிறிது-அதனிலும் சிறிது-
இரு வழியிலும் முடிவில்லைஇருபுறத்திலும் அநந்தம்
புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். “நமஸ்தே வாயோ,த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
Hey life! Who can know your greatness?
You are the God in front of us.
All the rules are made by you. All the rules perish by you.
Hey Life!
You are Wind.
You are Fire.
You are earth.
You are water.
You are sky.
You are the rule that make the shape in all the objects that are seen. 
Your function is to change those things which can change.

The flying insect, the killing tiger, the crawling worm, all the countless living beings of the world, all the hosts of lives beyond the counting of numbers spread out in all the countless worlds out there – all are your expressions.
We think of all those lives which are in the mud, in the water, in the air.
Within a square-foot of air, lakhs and lakhs of small beings live invisible to our eyes.

One big living being
Inside that body smaller beings
Inside them beings which are smaller than them
Inside them smaller things
Like this all over the universe lives are embedded.

MAHAT (Biggest) – bigger than that Big MAHAT – bigger than that- bigger than that…
ATOM- smaller than that- smaller than that- smaller than that…
Both the ways have no end. On both sides it is ANANTAM (endless).

Hey scholars!  Let us praise all the lives as soon as we wake up in the morning.

NAMASTE VAAYO TVAMEVA PRATYAKSHAM BRAHMAASI




OM OM OM


No comments:

Post a Comment