SECTION THREE
ஸர்வ மத ஸமரசம்
HARMONY
OF ALL RELIGIONS
கோவிந்த ஸ்வாமியுடன் ஸம்பாஷணை
CONVERSING
WITH GOVINDASWAAMY
மீளவுமங்கொருபகலில் வந்தான் என்றன் மனையிடத்தே
கோவிந்த வீரஞானி
ஆளவந்தான் பூமியினை
யவனி வேந்தர் அனைவருக்கு மேலானோன் அன்பு
வேந்தன்
The courageous Knower again
visited me at my house,
on another day.
He came to lord over the
world.
He is king overflowing with
compassion
and
greater than the all the kings who ruled the earth.
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்
My mind bloomed by the arrival of the noble
one,
like the beautiful lotus by the arrival of
the Sun.
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்
வெயிலுள்ள போதினிலே யுலர்த்திக் கொள்வோம்
காற்றுள்ள போதேநாந் தூற்றிக் கொள்வோம்
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்
குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்
பேற்றாலே குருவந்தான்
இவன்பால் ஞானப்பேற்றையெல்லாம் பெறுவோம்
யாம்
Let us complete our work when
there is time.
Let us dry the things when
the hot sun is there.
Let us winnow the grains when
the wind is there.
When the great Guru is seen
in front of us,
let us erase of the ego which
has appeared falsely as opposed the true Self.
Let us get rid of the tainted
forgetfulness
(and remember that Self is
Brahman and not the physical body).
Let us finish off the lives
of the deadly demons.
Let us beat and kill the delusion
which causes untold damages.
By some merit of the past,
the Guru has arrived here.
Let us gain all the benefits
of knowledge through him.
என்றெனுள்ளே சிந்தித்து
மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே ட்டேன் கூறாய்
என்றேன்
With such thoughts, I said-
“Hey Lord! Please instruct me
about the Supreme Reality,
so that the death which keeps
erasing the life slowly
gets erased off completely.
I salute you and ask with all
humbleness.
Please tell me the answer.”
வானவனாங் கோவிந்தசாமி சொல்வான்
அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்தசரணங்கள் முடிமேற்கொள்வோம்
பந்தமில்லை பந்தமில்லை பந்தமில்லை
பயமில்லை பயமில்லை பயமேயில்லை
The great heavenly being
spoke:
Let us place the lotus feet
of
the Great God, Lord of Kailaasa
on our head.
There is no bondage; no
bondage; no bondage!
There is no fear; no fear; no
fear at all!
அதுவே நீ யென்பதுமுன் வேதவோத்தாம்
அதுவென்றாலெதுவென நானறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளினாமம்
அவனியிலே பொருளெல்லாமதுவாம்
நீயும் அதுவன்றிப் பிறிதில்லை
ஆதலாலே
அவனியின்மீதெதுவரினுமசைவுறாமல்
மதுவுண்டமலர்மாலை யிராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா!
“That Thou Art” is the
declared truth of the Vedas.
Listen to what I say about
what ‘That’ is!
‘That’ means that which is
the source essence referred to by the term ‘That’.
All the objects in the world
are ‘That’ alone!
You are also nothing but
‘That’!
Therefore, hey disciple, live
here holding the feet of Rama
who wears the garland of
flowers filled with honey and
whatever happens on this
earth,
do not waver even a little.
(World seen around us including our own
little identities are all nothing but painted pictures on the three-dimensional
canvas of Brahman-state. All the painted pictures are in essence, the canvas
only.
The pictures of mountains, men, animals,
trees, painted on the canvas have no separate identities. Canvas alone is the
truth behind all the divided forms seen on the canvas.
Brahman alone is the essence of all that
exists.)
பாரான உடம்பினிலே மயிர்களைப்போற்
பலப்பலவாம் பூண்டுவருமியற்கையாலே
நேராக மானுடர்தாம்
பிறரைக் கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டாலுழுதல்
வேண்டா
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா
கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா
Like the hairs on the surface
of the body,
multifarious things appear by the grace of
Nature.
If the humans live honestly
without wanting to harm others,
then there is no need of
irrigation;
no need of weeding the green
land;
no need of fighting about
directing the path of canals.
சீரான மழைபெய்யும் தெய்வமுண்டு
சிவன் செத்தாலன்றி மண்மேற் செழுமை உண்டு
There is a divinity above
which will pour proper rains at proper times.
Unless Shiva himself dies of,
there is always prosperity on the earth.
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்குமுழைப்பின்றி யுணவுண்டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறியாயிற்றப்பா!
நினைக்குங்காலிது கொடிய நிகழ்ச்சியன்றோ?
Therefore, if the humans get
rid of deceitful nature,
then everybody will get food
without much effort.
Separating out, fighting for
ownership, building fences,
later referring to that as
‘guarding’,
it has become the way of
thieves who never care for justice.
When you deliberate about
this, is it not the most horrible thing?
பாதமலர் காட்டி நினை யன்னை காத்தாள்
பாரினிலித் தரும நீ பகருவாயே
ஒருமொழியே பலமொழிக்குமிடங்கொடுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும்
ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்
'ஹரிஹரி'யென்றிடினுமதே
‘ராம ராம' 'சிவசிவ' வென்றிட்டாலுமஃதேயாகும்
தெரிவுறவே 'ஓம்சக்தி' யென்று
மேலோர் ஜெபம்புரிவதப்பொருளின் பெயரேயாகும்
Great Mother protects you by
pointing out to her lotus feet.
You teach the proper way of
living to this world.
One language alone gives way
to many languages.
One language alone will
destroy the dirt (of hatred).
To make one understand the
one language
which says ‘destroy (the dirt)’,
there is one language that
says ‘OM NAMAH SHIVAAYA’
If you say ‘HARI HARI’, then also it is the same!
If you say - ‘RAMA RAMA’ and ‘SHIVA SHIVA’,
then also it is the same.
To reveal this truth alone,
the great men who know the truth,
recite the names with this
sole purpose in mind.
ஸாரமுள்ள பொருளினை நான் சொல்லிவிட்டேன்
சஞ்சலங்களினிவேண்டா
சரதந் தெய்வம்
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதுமருளைமனத்திசைத்துக் கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்
I have explained to you the
essence of truth.
Do not have anxieties any
more.
Truth alone is the Supreme
godhead.
Those whose hearts are not
moist (with kindness)
will not have the vision of
Shiva (Supreme Reality).
Always keep kindness as a
part of your mind.
Those whose hearts do not
have courage
will not have the vision of
Shiva (Supreme Reality).
Always keep doing acts of
courage (equanimity).
You should worship the lotus
feet of those also
who recite the names of Jehovah and Allah.
(Respect all religions.)
பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி!
புத்தமதம், சமணமதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்
ஸநாதனமாம் ஹிந்து மதம் இஸ்லாம் யூதம்
நாமமுயர் சீனத்துத் 'தாவு’ மார்க்கம்
நல்ல கண்பூசிமதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பலவுளவாமன்றே
யாவினுக்குமுட்புதைந்த கருத்திங்கொன்றே
There are five continents in
the world; but crores of religions!
Buddhism, Jainism, Parsi
cult,
the path which glorifies the
feet of Jesus as God,
the ancient religion of
Hinduism, Islam, Yutha (Judaism),
the great Tao cult of
Chinese, the good ‘Confucius’ religion.
All these are religions which
I know are there on this earth.
There is only one truth
hidden in all these religions.
பூமியிலே வழங்கிவரு மதத்துக்கெல்லாம்
பொருளினை நாமிங்கெடுத்துப் புகலக் கேளாய்
சாமி நீ சாமி நீ கடவுள் நீயே
தத்வமஸி தத்வமஸி நீயே யஃதாம்
பூமியிலே நீ கடவுளில்லையென்று
புகல்வது நின்மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமி நீ அம்மாயைதன்னை நீக்கிச்
ஸதாகாலம் 'சிவோஹ' மென்று ஸாதிப்பாயே!
I will reveal the essence of
all religions that prevail on this earth.
Listen!
You are the God.
You are the Supreme Self.
‘That Thou Art’ ‘That Thou Art’
You are ‘That’
If you say that there is no
God (Brahman) on this earth,
then it is because of the delusion that has
entered your mind.
You (as the essence of
Brahman) are the Supreme!
Get rid of that delusion (I
am the physical form),
and always be established in
the state of ‘I AM SHIVA’.
(Shiva means the state of auspicious
Brahman-state. As the Lord of Kailaasa stays always in the Brahman state, he is
also known as Shiva.
Realize that you are Brahman-state in
essence and not the physical form limited in space and time.)
No comments:
Post a Comment