PART THREE
கடல்
KADAL
[OCEAN -POWER OF WATER]
This
section deals with water, Varuna, the God of Waters.
It
is based also on some science articles he had been reading about water, pressure,
gravity etc. This is a prayer for rains.
(1)
கடலே காற்றைப் பரப்புகின்றது.
விரைந்து சுழலும் பூமிப்பந்தில்,
பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் நீர்,
அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து,
திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை.
அவள் நமது தலைமீது கடல்வீழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க.
கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு;
கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
அதுபற்றியே கடலும் கவிழவில்லை.
பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள்.
அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது.
மலை நமது தலைமேலே புரளவில்லை.
கடல் நமது தலைமேலே கவிழவில்லை.
ஊர்கள் கலைந்து போகவில்லை.
உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள்.
அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.
Ocean alone spreads the wind.
When the earth-ball is rotating so fast, why did not
the ocean-water filling the huge hollow pits, turn upside down and scatter off
into the sky?
It is the command of ParaaShakti.
She supports it so that the ocean does not fall over
our heads.
Let her auspicious name be praised.
Ocean is a big tank; a broad pool; huge well.
Does the well fall over our head?
Like that, the ocean also does not a fall upside down.
It is the command of ParaaShakti.
She placed the quality of gravity in the ground.
That keeps the objects stable.
The mountain does not roll over our heads.
Ocean does not fall upside down on us.
The cities did not scatter off.
The universe keeps going on in all manners.
All this is her auspicious grace.
We praise her auspicious grace.
(2)
வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து
வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகின்றது.
அங்ஙகனம்,ஓடி வரும்போது காற்று
மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களிலிருந்தே வருகிறது.
காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா. உனக்குத் தூபதீபங்கள் ஏற்றிவைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க.
இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும்
நோய் வருகிறது. அதனை மாற்றியருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை.
மனம் ‘ஹா ஹா’ வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,
ஓரிலை கூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா,
உங்கள் கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து, உலகம் தழைக்குமாறு,
இன்ப மழை பெய்தல் வேண்டும்.
The wind runs from areas which are very hot to areas
which are less hot. When it is running like this, the wind drives the clouds
also.
The rain we get like this comes from the sea-side.
Wind! From the sea of life, bring us abundant
life-rain.
We will light incense sticks and lamps for you.
Varuna!
Indra! May you be praised!
Please bless us to have good rains.
All our fields have dried up.
Our children and life-stock are getting ill because of
the heat.
Please grace us and change this.
The heat cannot be borne in the day time.
Mind is jumping about screaming ‘Haa Haa’!
All the birds are distressed and hiding in the holes.
From many days, the clouds collect in the evenings.
Because of the clouds, the wind stops blowing, a leaf
also does not move;the heat is terrible.
After a little time, huge winds blow and carry away
the clouds.
We are getting disappointed like this from the past
few days.
Indra! Varuna! Aryama! Bhaga! Mitra!
I sing about your compassion.
Let all our sufferings cease.
Let the world become prosperous.
Pour the rain of happiness.
OM
OM OM
No comments:
Post a Comment