Friday 13 May 2016

(22) Kaatru/Wind - 13

 (13)

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்
இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது
அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால்
ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில்
ஊமையாக இரந்த காற்றுஊதத் தொடங்கி விட்டதே
அதற்கு என்ன நேரிட்டிருக்கிறதுஉயிர் நேரிட்டிருக்கிறது.

வண்டியை மாடு இழுத்துச்செல்கிறது
அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது
வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது.

காற்றாடி? உயிருள்ளது
நீராவி-வண்டி உயிருள்ளது; பெரிய உயிர்
யந்திரங்ளெல்லாம் உயிருடையன.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது
அவள் தீராத உயிருடையவள்,பூமித்தாய்
எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் 
உயிர் கொண்டதே யாம்.

அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக் கப்பாலும்,
அதற்கப்பாலும், அதற்கப்பாலும்
சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் 
ஓயாது  சுழன்று கொண்டேதானிருக்கின்றன
எனவே,இவ்வையகம் உயிருடையது
வையகத்தின்உயிரையே காற்றென்கிறோம். 
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

Do not bring half-undestood science in here.
If you the inert body can move because of Praana, and say that you are alive, then why deny the fact that all the inert bodies in the world also move because of some power wind or whatever and are alive?
The only difference is that the inert bodies we call as human species can make noises and make meanings out of it; these bodies have such functional limbs. That does not make the power of Praana any less or useless!

Is there life in the moving leaf?
Yes!
The roaring sea-water – is it moving because of life?
Yes!
The stone thrown from the roof falls down.
How the movement is caused in it?
Because it has life.
The flowing stream is in which state?
 Living state.
The silent wind is blowing with noise.
What has happened to it?
It has become alive.

The bullock is pulling the cart.
The life in the bullock is extended to the cart also.
When the cart is moving, it is moving with life.

Kite? It is alive.
Steam engine? It is alive. Huge life.
All the machines are alive.

The earth-ball is rotating very fast without a break.
The Sun is rotating.
All the fishes in the sky (stars) which are scattered millions and millions and millions and millions of measured distances across, beyond that also, beyond that also- are also rotating continuously.
Therefore, this universe is alive.
The life of the universe alone is known as wind.
We worship and praise it at all times.


No comments:

Post a Comment