Friday 13 May 2016

II (66-8) Hymns to Guru

 SECTION TWO

(Here, Bharati talks about the various saints of his time who guided him in the path of Self-realization.)

குருக்கள் துதி
HYMNS TO THE GURU

குள்ளச்சாமி புகழ்
IN PRAISE OF KULLASAAMI


(KullaSaami literally means the saint who was short in stature.
A realized knower need not always become famous and renowned and run an Ashram to attract devotees. He might be any idiot-looking guy on the street.
These realized saints do not even have a name proper as they do not identify with their physical bodies.
KullaSaami is one such saint who was called so because of his small height.
He is also known as Chidambara Desikan, MaangottaiSaamitthevan (Mango-Seed Saint) and Kumaaratthevan. )

ஞானகுருதேசிகனைப் போற்றுகின்றேன்
 நாடனைத்துந்தானாவான் நலிவிலாதான்
 மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
 முற்றிலும்நாமமரநிலை சூழ்ந்துவிட்டோம்
 தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
 சித்தினியல் காட்டி மனத்த்தெளிவு தந்தான்
 வானகத்தையிவ்வுலகிலிருந்து தீண்டும் வகையுணர்த்திக்
காத்தபிரான் பதங்கள் போற்றி!

 I worship the great guru of Knowledge.
He is the Self of all that is there in the world.
He is never distressed.
By the grace of the Silent teacher,
we changed the birth state,
and have been completely drowned in the immortal state (of Brahman).

He revealed to me the excellence of ParaaShakti
who is blissfully sweet like honey.
  He revealed the nature of Chit (the manifest Brahman) 
and gave clarity to my mind. 
Salutation to the feet of the great one,
who taught me how to touch the sky above,
 from this earth itself.

  எப்போதுங் குருசரணம் நினைவாய் நெஞ்சே!
 எம்பெருமான் சிதம்பரதேசிகந்தாள் எண்ணாய்!
  முப்பாழுங்கடந்த பெருவெளியைக் கண்டான்
 முத்தியெனும் வானகத்தே பரிதியாவான்
 தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்
 தவநிறைந்த மாங்கொட்டைச் சாமித்தேவன்
 குப்பாய ஞானத்தால் மரணமென்ற குளிர்நீக்கி
யெனைக்காத்தான் குமாரதேவன்!

Always think of the feet of the Guru, hey mind.
Know that he is the great teacher Chidambara Desikan.

He saw the great expanse of Brahman
after crossing over the three states of existence.
(waking, dream, and deep sleep)
He is the Sun shining in the sky of liberation.
He is the great Lord who gave the state of ever-lasting quiescence.
He, the Maangottai Saamitthevan is a great man of penance.

Kumaaratthevan had the knowledge of the covering sheaths (of the Self)
and saved me by removing the cold named death.

தேசத்தாரிவன்பெயரைக்
குள்ளச்சாமி தேவர்பிரான் என்றுரைப்பார்
தெளிந்த ஞானி
 பாசத்தையறுத்துவிட்டான் பயத்தைச் சுட்டான்
 பாவனையாற் பரவெளிக்கு மேலே தொட்டான்
 நாசத்தையழித்துவிட்டான் யமனைக் கொன்றான்
 ஞானகங்கைதனை முடிமீதேந்தி நின்றான்
 ஆசையெனும் கொடிக்கொரு தாழ்மரமே போன்றான்

 People called him by the name of KullaSaami Devar Piraan.
He is a realized knower.
He cut off the shackles of attachment.

He burnt off the fear.
Through contemplation he touched that
which transcends the supreme expanse of the world.
He destroyed destruction.
He killed Yama.
He wore the Gangaa of knowledge on the locks of his head.
He became the log on the ground pulling the desire creeper down.

ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின்றேனே
வாயினாற் சொல்லிடவுமடங்காதப்பா
 வரிசையுடனெழுதிவைக்க வகையுமில்லை
 ஞாயிற்றைச் சங்கிலியாலளக்கலாமோ?
 ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ?
 ஆயிரனூ லெழுதிடினும் முடிவுறாதாம்
 ஐயனவன் பெருமையை நான் சுருக்கிச் சொல்வேன்
 காயகற்பஞ்செய்துவிட்டான்
அவன் வாழ்நாளைக்கணக்கிட்டு வயதுரைப்பார் யாருமில்லை

Ah! I am praising   the shining feet of that Guru
who is the state of Brahman, the source of all.
It cannot be completely covered by words coming out of the mouth.
There is no way that I can neatly list out his virtues.
Can sun be measured by a chain?
Can I calculate and write the praise of the Guru of knowledge?
Even if thousands texts are composed, it will not complete the task.
I will tell the greatness of the master in brief.
He has drunk the magical potion of immortality.
There is no one who can calculate his age.

குரு தர்சனம்
VISION OF GURU

அன்றொருநாட் புதுவைநகர்தனிலே
கீர்த்தி அடைக்கலஞ்சேரீசுவரன் தர்மராஜா
 என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்
 ராஜாராமையனென்ற நாகைப் பார்ப்பான்
 முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனைத்
திருத்தச் சொல்லி
 என்றனைவேண்டிக்கொள்ள
யான்சென்றாங்கண் இருக்கையிலே
அங்கு வந்தான் குள்ளச்சாமி

In the city of Puduvai,
there is a road named
Keerthi Adaikkalan Sereesvaran Dharmaraaja.
There was small house there.
One day a Brahmin of Naagai, named RaajaaRaamaiyan
 came there and requested me that
I should correct the Tamil translation of Upanishad
done by his father in the past.
 I went there with him.
When I stayed there, KullaSaami came there.

அப்போது நான்
குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றியிது பேசலுற்றேன்
அப்பனே! தேசிகனே!
ஞானியென்பார் அவனியிலே சிலர் நின்னைப் பித்தனென்பார்
 செப்புறுநல்லஷ்டாங்க யோகசித்தி
சேர்ந்தவனென்றுனைப்புகழ்வார் சிலரென்முன்னே
 ஒப்பனைகள் காட்டாமலுண்மை சொல்வாய் உத்தமனே!
எனக்கு நினை உணர்த்துவாயே

 I held KullaSami’s hand with affection and started talking.
“Father! Teacher!
Some people in this world call you as a knower; some as insane.
Some people have praised you in front of me saying that
you are a Siddha who has mastered the AshtaangaYoga.
Do not hide anything; but tell me the truth.
Hey Excellent one!
Reveal thyself to me!

யாவனீ? நினைக்குள்ள திறமையென்னே?
 யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவதென்னே?
 தேவனைப்போல் விழிப்பதென்னே?
சிறியாரோடும் தெருவிலே நாய்களொடும் விளையாட்டென்னே?
 பாவனையிற்பித்தரைப்போலலைவதென்னே?
 பரமசிவன் போலுருவம் படைத்ததென்னே?
 ஆவலற்று நின்றதென்னே?
அறிந்த தெல்லாம் ஆரியனே யெனக்குணர்த்தவேண்டும்
என்றேன்.

Who are you? What is the power in you?
What do you know?
Why do you roam about wearing patched up clothes?
Why do you stare like a divinity?
Why do you play with the dogs and children on the streets?
Why do you wander about acting mad?
Why are you dressed up like ParamaShiva (covered by ashes)?
How do you stay without desires of any sort?
Hey noble one! Teach me all that you know.

பற்றியகைதிருகியந்தக் குள்ளச்சாமி பரிந்தோடப் பார்த்தான்
யான் விடவேயில்லை
 சுற்றுமுற்றும் பார்த்துப்புன்முறுவல் பூத்தான்
 தூயதிருக்கமலபதத்துணையைப் பார்த்தேன்
 குற்றமற்ற தேசிகனும்
திமிறிக்கொண்டு குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்
 மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
 வான​வனைக் கொல்லையிலே மறித்துக்கொண்டேன்

 KullaSaami twisted his hand held by me and tried to run away.
I did not release my hold on him.
He looked all around here and there.
He smiled.
I looked at the support in the form of his lotus feet.
The taintless Guru forcefully removed my hands;
jumped and ran;
reached the backyard of the house.
I chased him from behind and running faster,
 blocked that godly man in that courtyard.


No comments:

Post a Comment