Friday 13 May 2016

(66-10) In praise of some saints

கோவிந்த சுவாமி புகழ்

IN PRAISE OF GOVINDASWAAMI

மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்
 வண்மைதிகழ் கோவிந்தஞானி
பார்மேல் யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்
 எம்பெருமான் பெருமையையிங்கிசைக்கக் கேளீர்!
 தீங்கற்ற குணமுடையான்
புதுவையூரார் செய்தபெருந்தவத்தாலேயுதித்த தேவன்
 பாங்குற்ற மாங்கொட்டைச்சாமி போலே
 பயிலுமதிவர்ணாசிரமத்தே நிற்போன்

We talked about the fame of MaangottaiSaami a little.
The knower Govinda,
 who was renowned for his generosity made fruitful whatever I had learnt.
Listen to his greatness as I sing it.
He is man of faultless virtues.
The noble master was born because of the merits of the great penance
done by the people of Puthuvai.
  Like the saintly MaangottaiSaami
he was also in the state of Sannyasa.

அன்பினால் முத்தியென்றான் புத்தனந்நாள்
 அதனையிந்நாட் கோவிந்தசாமி செய்தான்
துன்பமுறுமுயிர்க்கெல்லாந் தாயைப் போலே
 சுரக்குமருளுடையபிரான் துணிந்த யோகி
 அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்
 அன்பினையே தெய்வமென்பான் அன்பேயாவான்
 மன்பதைகள் யாவுமிங்கே தெய்வமென்ற மதியுடையான்
கவலையெனு மயக்கம் தீர்ந்தான்

 Buddha said that love will lead to liberation, on that day.
That is practiced by GovindaSaami on this day.
 He was a Master from whom love overflowed
 towards all the suffering beings like from a mother. 
He was a courageous Yogi.
        He would swallow even the ocean for love.
He stated that love was God.
He was the personification of love.
He had the belief that the entire humanity is God.
He removed the faintness of worry.

பொன்னடியாலென்மனையைப் புனிதமாக்கப்
 போந்தானிம் முனியொருநாள்
இறந்த வெந்தை தன்னுருவங் காட்டினான்
பின்னர் என்னைத்தரணிமிசைப் பெற்றவளின் வடிவமுற்றான்
 அன்னவன் மாயோகியென்றும் பரமஞானத்தனுபூதியுடையனென்றும்
அறிந்துகொண்டேன்
 மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
 மரணபயம் நீங்கினேன் வலிமைபெற்றேன்

One day this Sage entered my house to sanctify it with his golden feet.
He revealed his form as my father who had died.
Then he took the form of that mother who brought me into this world.
(showed affection equal to that of a mother and father)
I understood that such a kind person was a great Yogi
and had experienced the Supreme knowledge.
I took shelter in him accepting him as my Guru.
I lost my fear of death.
I became strong.

யாழ்ப்பாணத்து ச் சுவாமியின் புகழ்

IN PRAISE OF YAAZHPAANAM SWAAMI

(YAAZHPAANAM is the capital of SriLanka)

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்
 குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்,
 தேவிபதம் மறவாத தீரஞானி,
 சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
 பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி
 பரமபத வாயிலெனும் பார்வையாளன்
 காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்

I talked about the fame of GovindaSaami a little.
He belonged to the town of YaazhPaanam
which was like the eye of the world.
He was a courageous Jnaani who never forgot the feet of the Goddess.
He was the form of the NataRaaja of Chidambaram (in knowledge).
He was the boat of knowledge for the sinners.
He was the supervisor for the door of the Supreme state.

I saw him at ‘Puthuvai’ which is surrounded by
 lakes filled with water lilies and fields where fish swim.

 தங்கத்தாற் பதுமைசெய்துமிரதலிங்கம் சமைத்துமவற்றினிலீசன்
தாளைப் போற்றும்
 துங்கமுறு பக்தர் பலர் புவிமீதுள்ளார்
 தோழரே யெந்நாளுமெனக்குப் பார்மேல்
 மக்களஞ்சேர் திருவிழியாலருளைப் பெய்யும் வானவர்கோன்
யாழ்ப்பாணத்தீசன் றன்னைச்
 சங்கரெனன்றெப்போதும முன்னே கொண்டு
 சரணடைந்தாலது கண்டீர் சர்வ சித்தி

 There are many devotees, who make golden statues,
construct chariots with Lingas,
and worship the feet of the Lord in them.
Friends!
Always for me,
on this earth, understand that
all Siddhis will belong to one who surrenders to
the ‘Lord of Yaazhpaanam’ the king of gods,
who pours grace from his auspicious eyes,
revering him as Shankara (Shiva).

குவளைக் கண்ணன் புகழ்

IN PRAISE OF KUVALAI KANNAN

யாழ்ப்பாணத்தையனை யென்நிடங்கொணர்ந்தான்
 இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
 காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்
 பார்மேல் கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணனென்பான்
 பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்
 பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்
 தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்
 சிவனடியா ரிவன்மீது கருணைகொண்டார்

Yaazhpaaana master’ was brought to me
placing ‘it’ on the back of God Nandi.
like the other foot of the pair of feet of the Lord
 who resides on the hard Kailaasa Mountain.

 He was known as Kannan of Kuvalai town
which was renowned on this earth.
Kannan was born in a Brahmin family.
He equally treated the low-caste and the learned caste.
He took to the path of the concluding portion of Vedas(Upanishads).
The devotee of Shiva took compassion on him.

மகத்தான முனிவரெலாங் கண்ணன் தோழர்
 வானவரெல்லாங்கண்ணன் அடியாராவார்
 மிகத்தானுமுயர்ந்த துணிவுடைய நெஞ்சின் வீரப்பிரான்
குவளையூர்க் கண்ணனென்பான்
 ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பாணத்துச்
 ஸாமிதனை யிவனென்றன் மனைக்கொணர்ந்தான்
 அகத்தினிலே யவன்பாதமலரைப் பூண்டேன்
அன்றேயப்போதே வீடதுவே வீடு

All great Sages were the friends of Kannan.
All the Gods were Kannan’s servants.
Kuvalaiyur Kannan was the bravest of all
and had a great courageous heart.

Yaazhpaaana Lord who had no comparison in this world
was brought by this one to my house.
I adorned my heart with his feet.
On that day, at that moment was attained the final state of freedom.

பாங்கான குருக்களை நாம் போற்றிக்கொண்டோம்
 பாரினிலே பயந்தெளிந்தோம் பாசமற்றோம்
 நீங்காத சிவசக்தியருளைப் பெற்றோம்
 நிலத்தின்மிசை யமரநிலையுற்றோமப்பா!
 தாங்காமல் வையகத்தை யழிக்கும் வேந்தர்
 தாரணியிற் பலருள்ளார் தருக்கி வீழ்வார்
 ஏங்காமலஞ்சாமலிடர்செய்யாமல்
 என்றுமருள்ஞானியரே யெமக்கு வேந்தர்

We took shelter with the noble Guru.
We lost our fear on this earth.
We got rid of attachments.
We attained the ever-lasting grace of ShivaShakti.
We attained immortality on the earth itself.
Hey sire! There are many kings on this earth,
who destroy the world without protecting it.
They fall because of their arrogance.
These great ones of knowledge, who do not desire, who do not hurt,
but always act kind,
are alone the true kings for me.




No comments:

Post a Comment