Friday 13 May 2016

(66-9) Instruction from the Guru

உபதேசம்
INSTRUCTIONS

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
 பாழ்மனையொன்றிருந்ததங்கே
பரமயோகி ஒக்கத்தன்ன​ருள்விழியாலென்னை நோக்கி
 ஒரு குட்டிச்சுவர் காட்டிப் பரிதி காட்டி
 அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி
அறிதிகொலோ எனக்கேட்டான்
அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனுஞ்சென்றான்
யானும் வேதாந்தமரத்திலொரு வேரைக் கண்டேன்

The neighboring house was broke and the walls had fallen down.
It was a ruin of a place.
The great Yogi stared at me through both his eyes with compassion,
pointed out a broken ruin of a wall; and then the sun;
then at the same moment showed the reflection (of the Sun) inside the well;
and asked “Do you understand?”
I replied “Yes I understand!”
He felt very happy and went away.
I too had a glimpse of a root in the tree of Vedanta!

 தேசிகன் கைகாட்டியெனக்குரைத்த செய்தி
 செந்தமிழில் உலகத்தார்க்குணர்த்துகின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி
 மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்
 தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே தெரிவதுபோல்
உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
 பேசுவதில் பயனில்லை
அனுபவத்தாற் பேரின்பமெய்துவதே ஞானமென்றான்

The instruction which the Guru gave by pointing out those objects,
I will explain the same in beautiful Tamil to all the people of the world.
He said-
‘Bind the breath (Vaasi) through Kumbhaka and live like the mud, the wall.
You will see Shiva within you like the sun’s reflection in the well.
There is no use in talking.
Knowledge is the great bliss you attain through experience.’

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச்சொல்வேன்
 கருத்தையதிற் காட்டுவான்
வானைக் காட்டி மையிலகுவிழியாளின் காதலொன்றே
 வையகத்தில் வாழுநெறியென்று காட்டி
 ஐயனெனக்குணார்த்தியன பலவா ஞானம்
 அகற்கவன் காட்டியகுறிப்போ அநந்தமாகும்

If I was having a text (scripture) I will ask him to open a page.
He will show his instruction there.
He will point out at the sky and taught me that
the love for that beautiful lady with her dark light eyes (Mother) alone
 is the path to be followed in the world.
The noble one in this manner taught me many things.
For that purpose whatever examples he showed me were endless.

 பொய்யறியா ஞானகுரு சிதம்பரேசன்
 பூமிவிநாயகன்குள்ளச்சாமியங்கே
மற்றொருநாள் பழங்கந்தையழுக்கு மூட்டை
 வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
 கற்றவர்கள் பணிந்தேத்துங்கமலபாதக்கருணைமுனி
சுமந்துகொண்டென்னெதிரே வந்தான்
 சற்றுநகை புரிந்தவன்பால் கேட்கலானேன்
தம்பிரானே இந்தத் தகைமையென்னே?
 முற்றுமிது பித்தருடைச் செய்கையன்றொ?
 மூட்டை சுமந்திடுவதென்னே?
மொழிவாய் என்றேன்

Another day, the knowledge Guru Chidambareshan
the Ganesha of the earth, KullaSaami,
the compassionate Sage whose lotus feet were saluted humbly by the learned
came in front of me carrying on his back a tied up bundle of old clothes.
I laughed slightly and questioned him-
“Master! What is this thing you are doing?
Is this not the action of mad men?
Why do you carry this dirty bundle, tell me.”

புன்னகைபூத்தாரியனும் புகலுகின்றான்
புறத்தே நான் சுமக்கின்றேன்
அகத்தினுள்ளே இன்னதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ
என்றுரைத்து விரைந்தவனுமேகிவிட்டான்
 மன்னவன் சொற்பொருளினை யான் கண்டுகொண்டேன்
 மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்பதாலே
 இன்னலுற்று மாந்தரெல்லாம மடிவார் வீணே
 இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்

The noble saint smiled and said-
“I carry it only outside.
You are carrying another dirty bundle inside your mind,”
He said this, and went away fast.
I understood the meaning of the words uttered by the king of saints.
By breeding the old lies inside the mind
the men of the world suffer much and die wastefully.
One should bring freedom to the mind.

சென்றதினி மீளாது மூடரே
நீர் எப்போதுஞ் சென்றதையே சிந்தைசெய்து
 கொன்றழிக்குங் கவலையெனுங் குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக் குறித்தல் வேண்டா
 இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று
நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
 தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்
 அஃதின்றிச் சென்றதையே மீட்டு மீட்டும்
மேன்மேலு நினைந்தழுதல் வேண்டா அந்தோ!

What is gone will not come back, you fools!
Do not always think of what has past;
and be miserable by falling into the deadly chasm of worries.
‘Today we are born anew’
 ascertaining yourself with the repetition of this idea,
eat and sport and live happily.
Alas! Without doing that,
do not keep on crying,
 thinking again and again, repeatedly what is gone past.

மேதையில்லா மானுடரே!
மேலு மேலும் மேன்மேலும் புதியகாற்றெம்முள் வந்து
 மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்
 ஆன்மாவென்றெகருமத்தொடர்பையெண்ணி
 அறிவுமயக்கங்கொண்டு கெடுகின்றீரே!
 மான்மானும் விழியுடையாள் சக்திதேவி வசப்பட்டுத்
தனைமறந்து வாழ்தல் வேண்டும்

Hey you men without wisdom!
Again and again, again and again,
new wind fills inside us and
again and again new life appears afresh,
as the Aatman.

Worrying about the actions of the past binding you,
you have become deluded in the intellect, and are perishing.
Surrendering yourself to
ShaktiDevi who has eyes resembling that of the deer,
keep living lost in her thought.

சென்றவினைப் பயன்களெனைத் தீண்டமாட்டா
 ஸ்ரீதரன் யான் சிவகுமாரன் யானன்றோ?
 நன்றிந்தக்கணம் புதிதாய்ப்பிறந்து விட்டேன்
 நான் புதியவன் நான் கடவுள் நலிவிலாதோன்
 என்றிந்தவுலகின்மிசை வானோர்போலே இயன்றிடுவார்
சித்தரென்பார்

The results of the past actions will not touch me.
 I am ShreeDharan (Naaraayana).
I am ShivaKumaaran (Shiva’s son).
(Brahman is the inner essence of all the beings, Gods and humans alike).

Good! I have born afresh now.
I am new. I am the Supreme. I do not have any suffering.
Those who live on this earth with this knowledge like the heavenly brings above are known as Siddhas.

பரம தர்மக்குன்றின்மிசையொருபாய்ச்சலாகப் பாய்ந்து
 குறிப்பற்றார் கேடற்றார் குலைதலற்றார்

Jumping across at one stretch
on the mountain of the Supreme righteousness,
they do not have any divided identity.
They do not ever perish.
They do not shatter down.

குறியனந்தமுடையோராய்க் கோடி செய்தும்
 குவலயத்தில் வினைக்கடிமைப் படாதாராகி
 வெறியுடையோன் உமயாளை இடத்திலேற்றோன்
 வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
 செறியுடைய பழவினையாமிருளைச் செற்றுத்
 தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்
 அறிவுடைய சீடா
,நீ குறிப்பை நீக்கி அநந்தமாந் தொழில் செய்தாலமரனாவாய்

 They have endless identities now.
Though engaged in countless actions on this earth,
they are not bound by the action.
They have mastered the trick owned by
ParamaShiva, the Master of Vedas, who is intoxicated with bliss,
and who has placed Goddess Uma on his left side.
 These knowers have destroyed the dense darkness
namely the results of the past actions,
and wander on the earth like fire.
Hey you intelligent disciple!
You get rid of the limited identity (ego connected with the physical body)
and practice the contemplation of endless state of Brahman.
You will become immortal.

கேளப்பா!
மேற்சொன்ன உண்மையெல்லாம்
 கேடற்ற மதியுடையான் குள்ளச்சாமி
 நாளும்பல்காட்டாலும் குறிப்பினாலும்
 நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்
 தோளைப் பார்த்துக்களித்தல் போலேயன்னான்
 துணையடிகள் பார்த்து மனம்களிப்பேன் யானே
 வாளைப்பார்த்தின்பமுறு மன்னர் போற்றும்
 மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!

Listen hey you!
All the truths given above were explained by
KullaSaami of taintless intelligence daily
through many examples and gestures and verbal instructions.
Just like feeling delighted by looking at the shoulders (of Mother Supreme),
I delighted at the sight of the feet of my Guru, my support.
Victory to Maangottaichhami
who has his lotus feet worshipped
by kings who delight in the sight of the sword.





No comments:

Post a Comment