Friday 13 May 2016

(8) Shakti - 7

(7)

பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததாதொளையிலே பிறந்ததா
பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.

உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது
உள்ளம் குழலிலே ஒட்டாது.
உள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும்
இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள்அது குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து 
அதிலே இசை யுண்டாக்குதல்- சக்தி.

தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் 
யார் சுருதி சேர்த்து விட்டதுசக்தி.

ஜாரிகை வேணும்; ஜரிகை?” 
என்றொருவன் கத்திக்கொண்டு போகிறான்,அதே சுருதியில்
! பொருள் கண்டு கொண்டேன்
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும்
ஜரிகைக்காரன் உயிரிலும்  ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன்
தோற்றம் பல. சக்தி ஒன்று. 
அஃது வாழ்க.

The snake-charmer is playing the flute.
Did the music rise out of the flute? Or did it rise from the hole?
Did it rise from the breath of the snake charmer?

Flute is the body with holes. It is inert.
Breath is Praana.
Mind (Awareness-power) connects to the Praana and Praana connects to the body; and individual Jeeva goes through a life.

It (Music)rose from his mind; and came out of the flute.
Mind cannot make sound by itself.
Flute cannot play by itself.
Mind cannot connect to the flute.
Mind can connect to the breath.
Breath can connect to the flute.
Flute will sing.
This is the sport of Shakti.
She sings from the heart.
That is heard from the holes of the flute.
To connect unconnected things and make music out of them is - Shakti.

Domba children (street acrobats) are shouting and begging for alms.
Who tuned the flute of the snake charmer and the Domba children’s shouts together? Shakti!

“Jhaarigai! Want to buy Jharigai?”(gold or silver lace woven in a fabric) –
someone is walking on the road shouting like this.
In the same tune!

Ah! I found the meaning of it all!

Inside the life-force of the snake-charmer, inside the life-force of the Domba children, inside the life-force of the lace-seller, the same Shakti is sporting.
Instruments are many. There is only one player.
Many are the appearances.
Only one Shakti!

May that be forever!


No comments:

Post a Comment