Friday 13 May 2016

(14) Kaatru/Wind - 5

(5)

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்
உயிர்தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள்
அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று
காற்றே உயிர்.
அவன் உயிர்களை அழிப்பவன்
காற்றே உயிர்
எனவே உயிர்கள அழிவதில்லை
சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது
மரண மில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் -
எல்லாம் உயிர்ச் செயல்
உயிரை வாழ்த்துகின்றோம்.

Puraanas speak of Bheema and Hanumaan as sons of Vaayu.
Vedas declare that all the living beings are the sons of Vaayu.
Life is Wind.
Life is the object. Wind is its function.
Mother earth is alive.
Her breath is the wind on earth.

Wind alone is life.

No comments:

Post a Comment