Friday 13 May 2016

(13) Kaatru/Wind - 4

(4)


பாலைவனம், மணல், மணல், மணல்;
பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்
அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி
ஒரு வியாபாரக் கூட்டத்தோர் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான்
பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன
ஒரு க்ஷணம் யம வாதனை;
வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது
வாயு கொடியோன். அவன் ருத்ரன்
அவனுடைய ஓசை அச்சந் தருவது
அவனுடைய செயல்கள் கொடியன
காற்றை வாழ்த்துகின்றோம்.

Bharati has now flown his mind-chariot to the desert to observe the power of Wind-God.

Desert.

Sand, sand, sand, for miles long, in all the four directions there is only sand spread evenly all over.

Evening time.
Some merchants are going through the desert sitting on camels.

Vaayu has arrived like a violent enraged person.
All the sand particles of the desert are rotating above the ground.
For a second it is deathly pain.
The entire merchant crowd perishes in the sand.
Vaayu is cruel.
He is Rudra. (Destruction-God)
His sound is terrifying.
His actions are cruel.
We praise the wind. 



No comments:

Post a Comment