Friday 13 May 2016

(16) Kaatru/Wind - 7

(7)

சிற்றெறும்பைப் பார்எத்தனை சிறியது
அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் 
கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி
அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன
எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது
மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது.
ஒடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது
இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைத் கொண்டுதான் 
உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள்
காற்றைப் பாடுகிறோம்.  
அஃது அறிவிலே துணிவாக நிற்பது
உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது
உயிரிலே உயிர் தானாக நிற்பது
வெளி யுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம்
காற்றை நாம் அறிவதில்லை.
காற்றுத் தேவன் வாழ்க.

 Look at the tiny ant.
How small it is!
Hands, legs, mouth, belly- all these limbs are properly fitted inside it.

Who kept all these?
Mahaa Shakti!

All those limbs do their functions perfectly well.
Ant eats, sleeps, marries, and begets a child.
It runs, searches, battles, and protects the kingdom.
Wind is the support for all these actions.

Mahaa Shakti plays the game of life using the wind.
We sing about the wind.
It stands as courage in the intellect.
It becomes the likes and dislikes in the mind.
It remains as the life in the life.
We understand its actions in the external world.
We do not understand Wind.
May the God of wind be praised!


No comments:

Post a Comment