Friday 13 May 2016

(10) Part II - Kaatru/Wind -1


PART TWO 


காற்று
KAATRU

[WIND- PRAANA SHAKTI]


Vedas always sung hymns about VaayuDeva, the Wind God.
Who is he? Where to find him?
How to sing hymns for him, sitting in the hot dusty crowded world of ours?
Learn from Bharati!

He is sitting in some bench under a tree watching the things going on around him. In that crowd and noise, he concentrates on two pieces of ropes hanging from the tide up bamboo rods. He sits on the chariot of his imagination and gets ready to sing hymns about VaayuDeva! Here is how!

(1)

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல்,தென்னோலை.
குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் 
சாதாரணக் கயிற்றால் கட்டி  மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.
மூங்கிற் கழியிலே கொஞ்சம் ச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு
ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது
பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை
சில சமயங்களில் அசையாமல்உம்மென்றிருக்கும்
கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லைகுஷால்வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம்
நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?
பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?
ஆனால் அது சந்தோஷமாக இரக்கும் சமயம் பார்த்து 
வார்த்தை சொல்ல வேண்டும்
இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு 
சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும்அதில் சந்தேகமே யில்லை.

On the raised platform of the house;
a temporary roof; leafy roof; coconut leaf.

To and fro, crosswise, some seven eight bamboo rods have been tied with ropes and the coconut leaves are spread all over.

From one of the rods, a small piece of rope is hanging; just a finger-span of length.
(stretch the hand; length between the thumb and the little finger is called finger span;
some nine inches width)

You and I will never even notice those rope pieces.
But for Bharati, there is a love-story going on there!
The wind blows sometimes; sometimes not!
Ropes move sometimes; keep still sometimes; dash against each other sometimes; entangle also sometimes! All by the power of the wind!

Are we all small hanging inert pieces of ropes which move by the power of Praana or VaayuDeva?
Are our love-stories are also like this, just inert pieces moving and living the so-called life?

One day, this rope was rocking to and fro happily.
It did not seem to have any trouble at all.

Sometimes, it will be silent as if annoyed and remain without rocking.
It won’t even answer if called.

Today it was not so. It was in a jolly mood.

I and this rope are friends. We sometimes have a word or two together.

‘Will the rope talk back, if talked to?’

Talk and find out whether it answers are not.
But you must talk, only when it is in a happy mood.
Otherwise, it will keep its face puffed up and remain silent, like girls.

Whatever be it, the rope of this house will talk. There is no doubt about it.

ஒரு கயிறா சொன்னேன்
இரண்டு கயிறு உண்டு
ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும்.
அவை யிரண்டும் ஒன்றையொன்று
காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும்
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும்
வேடிக்கைப் பேச்சுப்  பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.

அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்
ஆண் கயிற்றுக்குக்கந்தன்என்று பெயர்
பெண் கயிற்றுக்குப் பெயர்வள்ளியம்மை

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)

Did I mention one rope?
There are two ropes.
One is one finger span; another is three fourth of a finger span.
One is male; another is female.
Husband and wife.
They both look at each other with love, smile and laugh; talking amusing things; were in great enjoyment.

At that time, I went there.
The male rope is called ‘Kandan’ (God Subrahmanya).
The female rope is called ‘Valliyammai’ (Goddess Valli, spouse of Subrahmanya).

(We can keep names for pieces of ropes also as we do for humans.)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது
வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது

அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

என்ன, கந்தா, சௌக்கியம் தானா
ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ
போய், மற்றொரு முறை வரலாமா?” 
என்று கேட்டேன்.
 

அதற்குக் கந்தன்:-
 “அட போடா வைதிக மனுஷன்உன் முன்னே கூடி லஜ்ஜையா
என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.

 “சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்” 
என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து
நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று
ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம்
நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?

Kandan comes to put its hand on Valliyammai.
Valliyammai moves back a little.
At that time I went there.

“How are you Kandaa, are you alright?
 Or may be I have come at an inopportune moment?
Can I come some other time?” - I asked.

Then Kandan said-
“Hey, don’t fuss, you Vedic man (Brahmin- who studies Vedas)!
What shyness is there in your presence?
Hey Valli, are you angry because Sire saw us romance?”

“Ok Ok! Don’t ask me anything” said Valli.

Then Kandan laughed aloud; clapped his hand; jumped up and down, and embraced Valliyammai, in my very presence.

Valliyammai started to screech.
But Valliyammai was happy inside her mind.
If someone sees us happy, don’t we feel happy?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான்
உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

I was very much satisfied by watching this.
What is wrong in telling the truth of how I feel?
The romance of the youth is very pleasing to the eyes.

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டுவிட்டது.
சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்
மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல்
இப்படியாக நடந்துகொண்டே வந்தது

என்ன,கந்தா, வந்தவனிடத்தில் 
ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாய்
வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா?’  என்றேன்.

 “அட போடா! வைதிகம்! வேடிக்கைதான பார்த்துக்கொண்டிருக்கிறாய்
இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு
இவளிட சில விவரகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது
தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்சகள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே, இருஎன்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

As Valliyammai made too much screeching noise, Kandan left her off.

After a few moments, it again embraced her.

Again screeches; again leaving her; again embrace; again screeches; it went on like this for some time.

“What is this Kanda? I came to see you and you are not even exchanging one word with me? I will come some other time. Shall I leave?”
– I said.

“Hey you Vaidik (Brahmin)!
You are amusing yourself anyhow, by watching us! Wait for some more time. I have to settle some matters with her.
After that I and you will have some serious talks. Don’t go off. Wait.”

I waited and continued to watch.

சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே 
நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள்
ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

 இரண்டேசங்கதி’; பின்பு மற்றொரு பாட்டு
கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி
இது முடிந்தவுடன், அது,
மாற்றி மாற்றிப் பாடி- கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று 
பாடிக் கொண்டேயிருக்கும்
அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும்கோலாஹலம்
இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் 
வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

After some time, the girl lost her natural shyness in her romantic rapture and forgot my presence.
Immediately there was a song; some nice tit-bits; one tune for one line;
two melodious parts; then a song.

After Kandan sang, Valli; after this one, that one; so singing in turns, a lot of delightful uproar!

For some time they will sing standing apart without contacting each other. Then Valli will herself go and touch Kandan.
That will come to embrace her; this will run away.
Great delightful uproar!
After a long time like this, Valliyammai became too much excited.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளு கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்ததுகந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.
என்னைக் கண்டவுடன்
எங்கடா போயிருந்தாய் வைதிகம்
சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயேஎன்றது.

 “அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே 
கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற 
தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!‘

 I went to drink water in the neighbour’s house.
Those two ropes did not see me going.
When I came back, Valliyammai was asleep.
Kandan was waiting for me.
As soon he saw me, it said-
“Where did you go off to, Vaidikam? Why did you not tell me and go?”

I asked- “Madam is well asleep I suppose?”

Bharati saw in front of him VaayuDeva.

Aha! How can I express the greatness of that God, who burst out of the rope and stood in front of me!

காற்றுத்தேவன் தோன்றினான்
அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன்
வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது

நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி
காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே 
வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல்வீசிக் கொண்டிருந்தது.
ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

The God of winds appeared.
I had imagined that his chest would be swelled up and broad.
But it was shining like a diamond needle.

“NAMASTE VAAYOTVAMEVA PRATYAKSHAM BRAHMAASI”
(Hey God of Winds! Vaayu! You are Brahman in direct experience.)

When he appeared, the entire sky was filled with Praana-power (Praana Shakti) and spreading heat.

I saluted him thousand times.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்
மகனே, ஏதடா கேட்டாய்
அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்ற கேட்கிறாயா
இல்லை. அது செத்துப் போய்விட்டது
நான் ப்ராண சக்தி.
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும்
என்னுறவில்லாதது சவம்
நான் ப்ராணன்
என்னாலேதான் அச்சிறு கயிறு 
களைபெய்தியவுடனனே அதனை  உறங்க- இறக்க-விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான்
சாவும் துயிலே
யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை
மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும்.
நான் விழிக்கச் செய்கிறேன்.
அசையச் செய்கிறேன்.
நான் சக்தி குமாரன்
என்னை வணங்கி வாழ்க.
என்றான்.

Wind-God said-
“Son! What did you ask?
Are you asking, whether that rope is asleep? No.
It has died. I am the Praana-power.
The body which is connected to me will move.
That which does not have my contact is a corpse.
I am Praana. Because of me only, the rope moves.
As soon as it was tired, I left it to sleep; to die.
Sleep is also death. Death is also sleep.
Where I am, both are not there.
I will come in the evening and blow again.
It will be alive again.
I make it wake up. I make it move.
I am Shakti Kumaara (Son of Shakti). Praise me and live.”
நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி 
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.”

NAMSTE  VAAYO
TVAMEVA PRATYAKSHAM BRAHMAASI
TVAAMEVA PRATYAKSSHAM BRAHMA VADISHYAAMI

Hey God of Winds! Vaayu! You are Brahman in direct experience.

I call you as Brahman only.


No comments:

Post a Comment