Friday, 13 May 2016

(21) Kaatru/Wind -12

(12)

காக்கை பறந்து செல்லுகிறது
காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது.
அலைகள் போலிருந்து, மேலே  காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும்
பொருள் யாது
காற்று, அஃதன்று காற்று
அது காற்றின் இடம், வாயு நிலயம்

கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன
அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு.
அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர். 

பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறிவிடுகிறது
நீரிலே சூடேற்றினால்வாயுவாகி விடுகிறது
தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது
அத்திரவத்திலே சூடேற்றினால், ‘வாயுவாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் 
வாயுநிலைக்குக் கொண்டுவந்துவிடலாம்

இந்தவாயுபௌதிகத் தூள்
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் 
காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று
அந்த வழியை இயக்குபவன் காற்று
அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று
அவனை வணங்குகின்றோம், உயிரைச் சரணடைகின்றோம்.

Crow is flying away.
It is swimming on the waves of the wind.
What is that thing which acts like waves and allows the crow to swim over it? Wind!
No, that is not the Wind.
That is the ‘place’ where Wind is. VaayuNilayam. (Abode of wind)

The very subtle elements which are invisible to our eyes come and dash against us (when the wind blows.)
It is commonly said that those particles are wind.
They are not the Wind.
It is the chariot on which the Wind rides.

If the ice block is heated up, it turns into water.
If the water is heated up, it becomes Vaayu.
If the gold is heated up, it melts like a liquid.
If that liquid is heated up, it will become Vaayu.

In this manner, all the objects of the world can be brought to the state of Vaayu.
This Vaayu is the particle of the element.
The Shakti which flows through it alone gets worshipped as God of Wind.

The path in which the crow flies is not wind. Wind makes the path.
Wind makes the crow go in that path.
We salute him.
We take shelter in the life-force.



No comments:

Post a Comment