Friday, 13 May 2016

(17) Kaatru/Wind - 8

(8)

மழைக் காலம். மாலை நேரம்
குளிர்ந்த காற்று வருகிறது. 
நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.

Rainy season. Evening time.
Cool wind is blowing.
The patient is covering his body. No use.

காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது
பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ
காற்று நம்மீது வீசுக. அதுநம்மை நோயின்றிக் காத்திடுக
மலைக்காற்று நல்லதுவான் காற்று நன்று
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர்
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.

If you fear wind, you cannot live happily in the world.
If Praana is wind, can one live fearing it?
Let the wind blow on us.
Let it protect us from disease.
Mountain air is good.
Sky air is good.
People make the city air into an enemy.
They do not worship the God of Wind directly.

அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்
காற்றுத் தேவனை வணங்குவோம் அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது
அழுகின பண்டங்கள் போடலாகாது. 
புழுதி படிந்திருக்கலாகாது
எவ்விதமான அசுத்தமும் கூடாது
காற்று வருகின்றான்
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து 
நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்
அவன் வரும் வழியிலே சோலைகளும்,
பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய
 நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம்.  

அவன் நல்ல மருந்தாக வருக
அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக
காற்றை வழிபடுகின்றோம்
அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன்
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்
அவன் வாழ்க.


Therefore, God of wind gets angry and destroys them.
Let us worship God of wind.
Wet mud should not be there in the path taken by him.
Bad smell should not be there.
Rotten objects should not be thrown.
No impure substance should be there.

Wind comes.
Let us wipe the path he is coming and sprinkle good water over it.
Let us make groves and flower gardens in his path.
Let us light camphor and other fragrant substances on his path.
Let him come as a good medicine.
Let him come as our life.
Let him come as nectar.
We worship Wind.
He is Shakti Kumaara (son of Shakti).
He is the son of the Great Queen.
We welcome him.
Let him be praised.

No comments:

Post a Comment