(10)
மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும்
ஈரத்திலே நிற்கிறார்கள்.
ஈரத்திலே உட்காருகிறார்கள்,
ஈரத்திலேயே நடக்கிறார்கள்,
ஈரத்திலேயே படுக்கிறார்கள்,
ஈரத்திலேயே சமையல்,
ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
It is raining.
The whole town has become wet.
The Tamil people like the buffaloes always stand in
the rain, sit in the rain, walk in the rain; sleep in the rain; cook in the
rain; eat in the rain.
You will not get a dry Tamilian for any thing on
earth.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது.
தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது.
நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள்.
மிஞ்சியிருக்கும் மூடர் ‘விதிவசம்’ என்கிறார்கள்.
ஆமாம், விதிவசந்தான்,
'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை’ என்பது
ஈசனுடைய விதி.
The cool wind is blowing continuously.
Many Tamil people have got fever.
Daily some die. Those fools who are left back say ‘all
because of fate.’
Yes! It is indeed fate!
It is an ordained rule of the Supreme Lord -
‘There is no happiness for those without
intelligence.’
சாஸ்த்திர மில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு
பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம்;நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால்,
காற்று நன்று.
அதனை வழிபடுகின்றோம்.
It is fated that diseases should abound in a country
where scriptures are not there. There are no scriptures in Tamil country.
Without encouraging the study of true scriptures,
forgetting whatever was there; the Brahmins of the Tamil country show false
stories to the fools and feed their stomach.
Do you call the cool wind as poison?
It is nectar.
If you reside in dry houses with good clothes, wind is
good.
Let us worship him.
No comments:
Post a Comment