(8)
பராசக்தியைப் பாடுகின்றோம்.
இவள் எப்படி உண்டாயினாள்?
அதுதான் தெரியவில்லை.
இவள் தானேபிறந்த தாய் ‘தான்’ என்ற பரம் பொருளினிடத்தே.
இவள் எதிலிருந்து தோன்றினாள்? ‘தான்’என்ற பரம் பொருளிலிருந்து.
எப்படித் தோன்றினாள்? தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும்.
வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்.
இதன் பயன் இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக;
உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க,
மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்;
நாம் வாழ்கின்றோம்.
நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை
மீண்டும் வாழ்த்துகின்றோம்.
We sing about ParaaShakti.
How did she appear? We do not know that.
She is the Mother who appeared by herself, from the
Supreme Brahman who is the Self.
From what did she appear?
From the Supreme Brahman, the Self!
How did she appear? We do not know!
We cannot see the Creation. The intellect cannot
understand it.
Death is seen by the eyes. The intellect cannot
understand it.
Life is seen by the eyes. The intellect can understand
that.
Life means to worship Shakti; the benefit of this is
getting happiness.
Mind with clarity; body with speed and heat; body with
peace and strength-
to get the grace of Mahaa Shakti like this, is called
living.
We live.
We again salute Mahaa Shakti
who makes us live.
OM
OM OM
No comments:
Post a Comment