Friday, 13 May 2016

(18) Kaatru/Wind - 9

(9)

காற்றே வா. மெதுவாக வா
ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே
காயிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே
அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே. 
பார்த்தாயா? இதோ,தள்ளிவிட்டாய்
புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய்
மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய்
வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி 
வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.

Wind! Come! Come slowly.
Do not dash against the window door and break it.
Do not throw all the papers helter-skelter.
Do not push the books in the cupboard down.
See! You have pushed them.
You have torn the pages of the book.
Again you have brought the rains here.
You have great talent in harassing the weak.

நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம்
நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம்-
இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான்
சொன்னாலும் கேட்கமாட்டான்
ஆதலால், மானிடரே வாருங்கள்
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதி செய்வோம்
இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகிவிடுவான்
காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்
வலிய தீயை வளர்ப்பான்
அவன் தோழமை நன்று
அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

Weak house, weak door, weak roof, weak tree, weak body, weak life, weak mind! God of Wind will shatter all these into pieces.
He will not listen if told.

Therefore, hey humans! Come!
Let us construct the houses strong.
Let us make the doors strong.
Let us bring firmness in the mind.
If we do like this, wind will become our friend.
Wind will snuff out a weak fire. He will increase the strong fire.
His friendship is good.

We praise him always.

No comments:

Post a Comment