(2)
நடுக் கடல். தனிக் கப்பல்.
வானமே சினந்து வருவதுபோன்ற புயற்காற்று.
அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன.
அவை மோதி வெடிக்கின்றன. சூறை யாடுகின்றன.
கப்பல் நிர்த்தனஞ் செய்கின்றது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது;
பாறையில் மோதிவிட்டது. ஹதம்!
இருநூறு உயிகள் அழிந்தன.
அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்குமென்பதை அறிந்துகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியே தானனிருக்கும்.
உலகம் ஓடுநீராகிவிடும்; தீ, நீர்,
சக்தி காற்றாகி விடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான்.
இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும்.
அஃது சக்தி யென்பது தோன்றும்.
அவன் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
What
is the power of this Wind-God?
Bharathi’s
mind-chariot flies towards an ocean; a turbulent ocean caught in storms.
Middle of the ocean! Heavy storm as if the sky was
angry!
Waves are raising high in a swarm; shattering; dashing
and bursting; breaking each other.
Ship is dancing; it is tossed at the speed of a
lightning; it has stuck against a rock.
HATAM! (Sanskrit word- Destroyed)
Two hundred beings are dead.
Before they died, they have seen the experience of the
world dissolution at the end of the Yuga, and gone.
The dissolution time also will be like this.
The world will be covered by spreading waters; fire;
wind.
Shakti will become the wind. Shiva will be in a
violent mood.
This entire world will look like one whole.
It will look like Shakti.
It will look as if Shiva (Unmanifest Brahman) is
standing behind her.
காற்றே, பந்தல் கயிறுகளை அசைக்கின்றான்.
அவற்றில் உயிர் பெய்கிறான்.
காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி,
நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி, நீரைத் தூளாக்கித், தூளை நீராக்கிச்,
சண்ட மாருதம் செய்கின்றான்.
காற்றே யுமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான்.
அவன் நம்மைக் காத்திடுக.
“நமஸ்தே வாயோ,த்வமேவ ப்ரத்ணக்ஷம் ப்ரஹ்மாஸி.
Wind alone moves the ropes in the thatched roof.
He pours life into them.
Wind alone makes the storm in the waters; makes
lightning flash in the sky, makes water into fire; makes fire into water;
shatters the water to pieces; makes the pieces into water and becomes the
violent storm.
Wind alone finishes everything. Wind alone protects
everything.
Let him protect us.
“NAMASTE VAAYO TVAMEVA PRATYAKSHAM
BRAHMAASI”
Hey
God of Winds! Vaayu! You are Brahman in direct experience.
No comments:
Post a Comment