Friday 13 May 2016

(15) Kaatru/Wind - 6

(6)


காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற 
இனிய வாசனையுடன் வா
இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து
மிகுந்த ப்ராண -ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு
காற்றே வா. எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு  நன்றாக வீசு.  
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே
பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம். 
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்உன்னை வழிபடுகின்றோம்.

Wind! Come to us!
Carry the pollen of flowers, and come with the sweet intoxicating fragrance.
Rub against the leaves, the water surface, bring us the essence of Praana.
Wind, come.
Blow well so that life-fire can blaze brightly for long.
Do not lose Shakti and snuff it away.
Do not storm like a ghost and kill it.
Slowly, rhythmically, for long;keep blowing.
We will sing songs of you.
We will praise you. We will worship you.


No comments:

Post a Comment