Friday 13 May 2016

V -Kaatsi/Scene - Sun (2)

(7)

ஞாயிறே! நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது?
 நீ அதனை உமிழ்கின்றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?
அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?

விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது
காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு
காற்றின் வடிவே திரியென்றறிவோம்
ஒளியின் வடிவே காற்றுப் போலும்.

ஒளியே நீ இனிமை.

Hey Sun! (Brahman)
How does the light (perceiver of the world/individual Self) stay in you?
Do you spit it?
Or does it devour you?
Or rather, are you not anything but light?

The wick of the lamp becomes a form of air and gives light.
Life is there because of Praana and we are aware of the world.

What is the relation between the air and flame?
(Praana and life)

The wick is the form of air.
(Life is Praana)

Air must be the form of light.
Praana is the form of individual consciousness.

Light! You are pleasing.


                                                                  (8)

ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு
வெம்மை யேற ஒளி தோன்றும்.
வெம்மையைத் தொழுகின்றோம்.
வெம்மை ஒளியின் தாய்ஒளியின் முன்னுருவம்.
வெம்மையே, நீ தீ.
நீ தான் வீரத் தெய்வம்
தீ தான் ஞாயிறு.

 தீயின் இயல்பே ஒளிதீ எரிக.
அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக.
அதனிடத்தே தசை பொழிகின்றோம்.தீ எரிக .
அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக
அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக.

அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ
விரதத் தீ, வேள்வித் தீ
சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ-
இவை யனைத்தையும் தொழுகின்றோம
இவற்றைக் காக்கின்றோம்.
இவற்றை ஆளுகின்றோம்.
தீயே நீ எமது உயிரின் தோழன.
உன்னை வாழ்த்துகின்றோம.

நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக
தீயே, நின்னைப்போல, எமதுள்ளம் சுடர்விடுக.
தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக.

ஞாயிற்றினிடத்தே ,தீயே, நின்னைத்தான் போற்றுகிறோம்
ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம்,
நினதொளி நன்றுநின் செயல் நன்றுநீ நன்று.

What is the relation between light and heat?
What is the relation netween the Individual Self and suffering?

If heat is on the increase, light appears.
Life is a form of suffering only experienced by the individual Self.

We praise the heat.

Heat is the mother of light.
It is the previous state of light.

Heat! You are fire!
You are the deity of valor.
You are the Sun.

The nature of fire is light.
The suffering one is the individual Self, the essence of Brahman.

Let the fire burn.
We pour ghee (desires) into it.
Let the fire burn.
We pour flesh (work) into it.
Let the fire burn.
We pour blood (attachments) into it.
Let the fire burn.
We perform Sacrifices for it.
Let the fire burn.

We worship all these-
fire of Dharma, fire of knowledge, fire of life, fire of asceticism, fire of anger, fire of hatred, fire of violence.
We protect these. We control them.
Fire! You alone are the friend of our life.
We praise you.
Like you, let our lives emanate heat and light.

Fire! Like you, let our mind rise in flames. (burn away)
Fire! Like you, let our intellects be ablaze. (shine with knowledge)

Fire! We worship you alone in the Sun.
Hey deity of the Sun, we praise you.
Your light is good. You action is good.
You are good.

                                                                  (9)


வானவெளி என்னும் பெண்ணை 
ஒளியென்னும் தேவன் மணந்திருக்கின்றான்.
அவர்களுடைய கூட்டம் இனிது.
இதனைக் காற்றுத்தேவன் கண்டான்
காற்று வலிமையுடையவன்.

இவன் வாவெளியைக் கலக்க விரும்பினான்
ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை.
இவள் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்.

வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன. 
காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
அவன் அமைதியின்றி உழலுகிறான்.
அவன் சீறுகின்றான். புடைக்கின்றான்
குமுறுகின்றான்.ஓலமிடுகின்றான்.
சுழலுகின்றான்.துடிக்கின்றான். ஓடுகின்றான்.
எழுகின்றான்.நிலையின்றிக் கலங்குகிறான்.
வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்கின்றன
காற்றுத் தேவன் வலிமையுடையவன்
அவன் புகழ் பெரிது அப் புகழ் நன்று
ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.

அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன.
அவை வெற்றியுடையன.
ஞாயிறே, நீதான் ஒளித்தெய்வம்.
நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள்
உங்கள் கூட்டம் மிக இனிது.
நீவிர் வாழ்க.

Manifest Brahman consciousness appears as the world bound by time and space.The mind which cannot satiate its desire acts mad at all times.

The God named Light marries the woman called Sky.
Their union is pleasing.
This was seen by the God of Winds.
Wind is very strong.

Wind wanted to unite with the sky.
But the sky liked only the light and not the wind.
He taints her greatness by blowing hard (making dust). (Rajas/ attachments, desires)

Sky and light united like two lives.
World and Brahman are one; yet appear as two.

God of Wind (mind powered by Praana) was envious.
He wanders without peace.
He hisses; blows wildly; he grumbles; he laments aloud.
He rolls; he shivers; he runs; he gets up; he suffers without a place to stay.
Sky and Light unite together in silence and laugh.

God of wind is strong.
His greatness is vast.
His fault is good.
But sky and light are greater than him.

They unite together in silence and remain happy always.
They are victorious.

Sun! You are the deity of light.
The sky-lady loves you alone.
Your union is very pleasing.
You both be praised!

(10)

ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது.

பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்-
இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன.

தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது பேல 
இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டன வென்பர்
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான்.
இவை ஒளி குன்றிப் போயின
ஒளி யிழந்தன வல்ல; குறைந்த ஒளி யுடையன
ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை
இருளென்பது குறைந்த ஒளி

செவ்வாய்,புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன
இவை தமத தந்தைமீது காதல் செலுத்துகின்றன.
அவன் மந்திரத்திலே கட்டுண்டவரை கடவாது சுழல்கின்றன.
அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்லமாட்டா
அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான்.
அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே 
இவை உருளுகின்றன
அவனொளியை இவை மலரிலும், நீரிலும், காற்றிலும்
பிடித்து வைத்துக்கொள்ளும்.

ஞாயிறு மிகச் சிறந்த தேவன்
அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும்.
அவனையே மலர் விரும்புகின்றது.
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி யிருக்கின்றன.
அவனை நீரும், நிலமும், காற்றும், உகந்து களியுறும்.
அவனை வான் கவ்விக்கொள்ளும்.
அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர்.
அவன் புகழைப் பாடுவோம்.
அவன் புகழ் இனிது.

Sun! All objects which see your face get the shine.
All the objects we perceive exist because their essence is Brahman alone.

Earth, Moon, Mars, Mercury, Saturn, Venus, Uranus, Neptune, - so many hundreds of houses- the moment your rays touch them, they laugh brightly.
All embodied beings exist because of the shine of Brahman.

They say that these all came out of the bursting Sun like sparks from a fire.
The thief called ‘Time’ rubbed them.
Their shine became less; they did not lose their shine.
All Jeevas became ignorant; but they did not lose their essence of Brahman.
They had less shine.

There is no object in the world that has no shine. (Essence of Brahman)

Darkness is less light. (Ignorance is lack of knowledge.)

Let us praise ‘That’ by the power of which, the Sun stays at his place and protects the world!

The girls called Mars and Mercury go around the Sun.
They love their father.
He rotates as if controlled by a spell, without transgressing his limits.
His power will never cross the limits.
He always keeps looking at them.
They roll about, so that their whole bodies get drenched in his light.
They will catch his light in flower, water, and wind.

Sun is a great God. (Supreme Deity/ Brahman)
Wherever he touches, life appears.
The flowers love only him.
The leaves are in the state of tranceYoga absorbed in his beauty.
Water, land, and wind like him and are happy.
The sky grasps him.
All the other Gods serve him.
Let us praise him.
His praise is pleasing.

                                                                  (11)


புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சத்திகளே,
எல்லோரும் வருவீர்.
ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.

அவன் நமக்கெல்லாம் துணை
அவன் மழை தருகின்றான். மழை நன்று
மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.

ஞாயிறு வித்தை காட்டுகின்றான்.
கடல் நீரைக் காற்றாக்கி மேலேகொண்டு போகின்றான்.
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது.
மழை பாடுகின்றது.
அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.

வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன.

பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்;
வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன,
அனைத்தும் ஒன்றாதலால்.

வெப்பம் தவம். தண்மை யோகம்.
வெப்பம் ஆண். தண்மை பெண்.
வெப்பம் வலியது. தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ.
நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம்.
அது வாழ்க.

Hey you scholars, learning sources, living beings, elements, powers!
All of you come!
Let us praise Sun.
Sun in the sky who gives us light and heat.

He is the support of us all.
He gives rains.
Rain is good.
Let us praise the deity of rain.

Sun makes magic.
He turns the sea water into air and takes it up.
He provokes the wind to make that into water again.
The rain pours down pleasing all.
Rain sings.
It is a musical instrument with crores of strings.
Diamond rods made of nectar fall down from the sky.

The earth lady is freed of thirst.
She becomes cool.

Heat produces coolness; coolness produces heat; as everything is the same.
Where is the differentiation in one second-less Brahman?

Heat is penance.
Coolness is Yoga (union with the Supreme).
After the hard penance one attains the cool state of the Self.

Heat is man.
Coolness is woman.
Heat is strong.
Coolness is pleasing.
Woman is greater than a man.
We praise the deity of heat.
Let it be praised.

(12)

நாம் வெம்மையைப் புகழ்கின்றோம்

வெம்மைத் தெய்வமே, ஞாயிறே,ஒளிக்குன்றே,
அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே,
வலிமையின் ஊற்றே, ஒளிமழையே, உயிர்க்கடலே!

சிவனென்னும் வேடன், சக்தியென்னும் குறத்தியை  உலகமென்னும் புனங் காக்கச் சொல்லிவைத்து  விட்டுப்போன விளக்கே!

கண்ணனென்னும் கள்வன்  அறிவென்னும் தன்முகத்தை மூடிவைத்திருக்கும் 
ஒளியென்னும் திரையே, ஞாயிறேநின்னைப் பரவுகின்றோம்,

மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்
காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்
வெளி நின் காதலி; இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன்.
நின்னைப் புகழ்கின்றோம்.

தேவர்களெல்லாம் ஒன்றே
காண்பன வெல்லாம் அவருடல்.
கருதுவன அவருயிர்.
அவர்களுடைய தாய் அமுதம்
அமுதமே தெய்வம்.
அமுதமே மெய்யொளி.
அஃது ஆத்மா.
அதனைப் புகழ்கின்றோம்.
ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.

We praise the heat.
Hey deity of Heat! Sun! Heap of light!
You are the Lord of the ‘eyes which appear like fish in the body’, (body) which is the world of the Jeeva (life-principle), (Jeeva) which is immortal!

Hey Love! You are the father of the Earth-lady!
You are the stream of strength!
You are the rain of light!
You are the sea of life!

The hunter named Shiva ordered the mountain-girl (Kuratthi) named Shakti to guard the field called the world and left you, the light burning!

The thief called Krishna has covered his face namely ‘Knowledge’ with you the screen of light!
Hey Sun! We praise your glory!

Rain is also your daughter.
Land is also your daughter.
Wind, sea, flame are your children.
Sky is your lover.
Thunder and lightning are your amusements.
You are the Lord of all Gods.
We praise you.

All the Gods are one.
All that is seen is the body of that God. (Brahman)
All that is thought is the essence of that God. (Brahman)
The Mother of that God is Immortality. (nectar)

Immortality is God.
Immortality is the true essence.
That is Self.
We praise ‘That’! It is good to glorify the Sun.
(13)

மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது
இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது.
புலவர்களே, மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.
மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை
ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர்.
மின்னலைத் தொழுகின்றோம்.
அது நம்மறிவை ஒளியுறச் செய்க
மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன.
மின்சக்தி இல்லாத இடமில்லை
எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே
கருங்கல்லிலே,வெண்மணலிலே, பச்சை இலையிலே, 
செம்மலரிலே,  நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே -
எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது.
அதனை போற்றுகின்றோம்.

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க.  
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக
 நமது பாட்டு மின்னலுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.

மின் மெலியதைக் கொல்லும்; வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.

 ஒளியை, மின்னலை, சுடரை, மணியை, ஞாயிற்றை, திங்களை,
வானத்து வீடுகளை, மீன்களை-
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.

அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.


Rains pour down; wind blows; thunder roars; lightning flashes.
Aapa/Water; Vaayu /attachments; shabda /sound/names and forms; mind vibrations which continuously flash forth.

Hey scholars!
Let us praise the lightning (thought flashes).
The shine of the lightning is the sport of the deity of Light (Self).
It is one form of that deity of light.
The Greeks worshipped it and got the inner light.
We praise the lightning.
Let it make our intelligence shine forth.

The cloud children (potent desires) pour down lightning flowers (thoughts).
There is no place, where the power of lightning is not there.
So are the Gods!

In the black rock, in the white sand, in the green leaf, in the red flower, in the blue cloud, in the wind, in the horizon, - everywhere there is the power of lightning lying dormant.

Whatever we see is the mind appearing as all objects.

We praise that!

Let the lightning be produced in our eyes. (as sight)
Let the lightning flash in our minds. (as thoughts)
Let the lightning appear in our right hand. (as work)
Let our song be offered to the lightning. (as love)
Let our words beat up like the lightning. (be powerful)

Lightning kills the weak.
It strengthens the strength.
Let it increase our strength.

We praise the light, lightning, flame, the gem of the sky - the Sun, the Moon, the abodes in the sky, the fish (stars) - we praise all forms of light.

We praise Brahman which is the individual Self, the thoughts, the bound man of the world, the witness consciousness, the mind-principle, all the embodied beings, all the learning!

We praise all!
We praise the Sun! (Brahman)



OM OM OM



  

No comments:

Post a Comment